How to Keep Ramadan Fast
நோன்பு வைப்பது எப்படி - மாற்று மத சகோதர சகோதரிகளுக்கு

How to keep Fast, Step By Step instructions for Non-Muslims. நோன்பு நோற்பது எப்படி? மாற்று மதத்தினருக்கு எளிய செயல் முறைகள்

ரமலானில் நோன்பு வைப்பது எப்படி

மாற்று மத சகோதரர்களுக்கு எளிய வழிமுறைகள்

இஸ்லாத்தில், ரமலான் மாதத்தில் கிட்டத்தட்ட 29-30 நாட்கள் உண்ணாவிரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் அல்லாஹ்வுக்காக உண்ணாவிரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உண்ணாவிரதம் ஏப்ரல் 3, 2022 அன்று தொடங்கி, பிறைகளின் தெரிவுநிலையைப் பொறுத்து மே 2, 2022 அன்று முடிவடைகிறது.

காலை சூரிய உதயத்திற்கு முன் உணவு உண்டு பின்னர் ஒரு சிறு பிரார்த்தனை (நிய்யத்) செய்து நோன்பு வைக்கப்படுகிறது. மாலை சூரியன் அஸ்தமிக்கும் நேரம் சிறு பிரார்த்தனை (துஆ) செய்து உணவு உண்டு நோன்பு திறக்கப்படுகிறது (முடித்து வைக்கப்படுகிறது). இடைப்பட்ட நேரத்தில் அதாவது நோன்பு வைத்தத்திலிருந்து நோன்பு திறக்கும் வரையில் எதுவும் உண்ணவோ அருந்தவோ கூடாது. இடைப்பட்ட நேரத்தில் ஏதாவது உண்டால் நோன்பு செல்லாது. நோன்பு வைக்கும் நாளில் மாற்று மத சகோதர சகோதரிகள் , விரும்பினால், ஐந்து வேலை இஸ்லாமிய முறைப்படி தொழலாம். இஸ்லாமியர்களுக்கு ஐந்து வேலை தொழுகை கடமையாக்கப்பட்டது, நோன்பு வைத்தாலும் வைக்கா விட்டாலும். வயது வந்த இஸ்லாமிய ஆணுக்கும் பெண்ணுக்கும் நோன்பு நோற்பது கட்டாயமாக்க பட்டிருக்கிறது. நோன்பு நோற்க வேண்டும் என்று அல்லாஹ் குர்ஆனிலே அதிகாரம் 2 வசனம் 185 இல் கட்டாயமாக்கி இருக்கிறான்.

"ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்)."

  • ஜான் டிரஸ்ட்

நிய்யத், துஆ, ஸலாஹ், ஸஹர், இஃப்தார் என்றால் என்ன?


நிய்யத்  - நோக்கம்  - உங்கள் நோக்கத்தையும் விருப்பத்தையும் அல்லாஹ்விடம் கேட்கும் சிறு பிரார்த்தனை.

துஆ  - வேண்டுதல் - அல்லாஹ்விடக் கேட்கும் வேண்டுதல்.

ஸலாஹ் - தொழுகை - இஸ்லாமிய தொழுகை

ஸஹர் - நோன்பு வைக்கும் அதிகாலை நேரம்.

இஃப்தார் - நோன்பு திறக்கும் நேரம்.

இந்த பக்கத்தில் இருக்கும் நோன்பு மற்றும் தொழுகை கால அட்டைவணையை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

தொழுகை கால அட்டைவணை பதிவிறக்கு
நோன்பு கால அட்டைவணை பதிவிறக்கு


நோன்பு கடைபிடிக்கும் செயல் முறை


1. நோன்பு கால அட்டைவணையிலிருந்து நோன்பு ஆரம்பிக்கும் நேரம் (ஸஹர் முடிவு நேரம்) த்தை குறித்து வைத்து கொள்ளுங்கள். முன்தின நோன்பிற்குத் தேவையான உணவை தயாரித்து கொள்ளுங்கள். நோன்பு ஆரம்பிக்கும் நேரம் சுமார் 10 நிமிடம் காலை நேர தொழுகை (ஃபஜ்ர் தொழுகை) க்கு  முன்னதாக இருக்கும்.

2. நோன்பு நோற்கும் நாளில் நோன்பு ஆரம்பிக்கும் நேரத்திற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்னதாக எழுந்து கொள்ளுங்கள். பல் துலக்கி காலைக் கடன்களை முடித்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் உணவை சாப்பிடுங்கள், மிகவும் அதிகமாக சாப்பிட வேண்டாம். குடிக்கும் தண்ணீருடன் சேர்த்து  80% - 90% மட்டுமே சாப்பிடவும். உங்கள் உணவு வீட்டில் உண்ணும் மதிய உணவு போல இருக்க வேண்டும், சைவமோ அல்லது அசைவமோ எதுவாக இருந்தாலும் சரி. அசைவமா இருந்தால் ஹலாலாக இருக்க வேண்டும். ஹலால் இறைச்சியை இஸ்லாமியாக இறைச்சி கடையில் வாங்கலாம். நிறைய பேரிச்சை பழங்கள் சாப்பிடுங்கள் அது நாள் முழுதும் சக்தி கொடுக்கும், அசதி ஏற்படாது.

3. நோன்பு நோற்கும் பொழுது பதட்டப்பட வேண்டாம். நோன்பு மிகவும் எளிதானது. அல்லாஹ் நோன்பை உங்களுக்கு மிகவும் எளிதாக்குவான்.

4. நோன்பு ஆரம்பிக்கும் 10 நிமிடம் முன்பு உங்கள் அனைத்து உணவையும் உண்டு முடித்து விடுங்கள், தண்ணீரையும் குடித்துவிடுங்கள்.

5. இப்பொழுது உங்கள் நிய்யத்தை (நோக்கம் - சிறு பிரார்த்தனை) சொல்லி உங்கள் நோன்பை தொடங்கலாம். கீழே இருக்கும் நிய்யத்தை நீங்கள் இங்கிலீஷிலோ, தமிழிலோ அல்லது ஒலிபெயர்பிலோ கூறலாம், அனைத்தும் ஏற்றுக்கொள்ள படும்.

(அரபு)
وَبِصَوْمِ غَدٍ نَّوَيْتُ مِنْ شَهْرِ رَمَضَانَ

(ஒலிபெயர்ப்பு)
வ பிசவ்மி கதின் நவ்வய்த்து மின் சஹரி ரமலான்


(தமிழ்)
அல்லாஹ்வுக்காக ரமலான் மாதத்தில் நோன்பு நோற்க விரும்புகிறேன்.


6. உங்கள் நிய்யத்தை சொல்லி முடித்தவுடன் உங்கள் நோன்பு ஆரம்பமாகிறது. அதன் பிறகு உண்ணவோ பருகவோ கூடாது. உமிழ் நீர் விழுங்கினால் பரவாயில்லை.

7. (விரும்பினால்) ஃபஜ்ர் தொழுகையை தொழுங்கள் (அதிகாலை தொழுகை). உங்களுக்கு இஸ்லாமிய நண்பர்கள் இருந்தால் அவர்களிடம் தொழுவது எப்படி என்று உதவி கேட்கலாம்.

8. (விரும்பினால்) மதிய நேரத்தில் துஹர் தொழுகையை தொழுங்கள் (நேரத்திற்கு தினசரி தொழுகை அட்டைவணையை பாருங்கள்).

9. (விரும்பினால்) அஸர் தொழுகையை தொழுங்கள் (சாயங்காலத்திற்கு முன் தொழுகை) (நேரத்திற்கு தினசரி தொழுகை அட்டைவணையை பாருங்கள்).

10. நோன்பு திறப்பதற்கு தேவையான உணவை தயாரித்து வைத்து கொள்ளுங்கள். பேரிச்சம்பழம், பழச்சாறு, இட்லி, தோசை, வடை, சட்னி, சாம்பார், ஹலால் அசைவம் (மட்டன், சிக்கன்) இவைகள்.

11. நீங்கள் இப்பொழுது நோன்பு திறக்க தயாராகி விட்டால் நோன்பு திறக்கும் நேரத்தை (இப்தார் நேரம்) பார்த்துக் கொள்ளுங்கள்.

12. நோன்பு திறக்க 5 அல்லது 10 நிமிடத்திற்கு முன் உணவை எடுத்து வைத்துக் கொண்டு அமைதியாக இருங்கள்.

13. நோன்பு திறப்பதுற்கு முன் நீங்கள் அல்லாஹ்விடம் துஆ (வேண்டுதல் - பிரார்த்தனை) செய்யலாம். தமிழிலேயே கேட்கலாம். துஆ உங்களை பற்றியோ, பெற்றவர்களை பற்றியோ, கல்வி, செல்வம், வாழ்க்கை வளத்தை பற்றியோ கேட்கலாம். அல்லாஹ் உங்களுக்கு அருளையும், வளத்தையும் தருவானாக. ஆமீன்.

14. நோன்பு திறக்கும் நேரம் வந்தவுடன், கீழே இருக்கும் நோன்பு திறக்கும் துஆவை (பிரார்த்தனை) கூறி உங்கள் நோன்பை முடித்து கொள்ளலாம். தமிழிலோ, இங்கிலீஷிலோ, ஒலிபெயர்பிலோ சொல்லலாம் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும்.

(அரபு)
اللَّهُمَّ اِنِّى لَكَ صُمْتُ وَبِكَ امنْتُ وَعَليْكَ تَوَكّلتُ وَ عَلى رِزْقِكَ اَفْطَرْتُ

(ஒலிபெயர்ப்பு)
அல்லாஹும்ம இன்னி லக சம்து வ பிக்க ஆமன்து வ அலைக்க தவக்கல்த்து வ அலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து

(தமிழ்)
அல்லாஹ்வே! நான் உனக்காக நோன்பு இருந்தேன் மேலும் நான் உன்னை நம்புகிறேன், நான்  உன் மீது நம்பிக்கை வைக்கிறேன் மேலும் உன் வாழ்வாதாரத்தால் எனது நோன்பை திறக்கிறேன்.


15. இப்பொழுது உங்கள் உணவை உண்ணலாம். பேரீச்சம்பழத்தில் ஆரம்பித்து உணவை முடிக்கவும். அதிகமாக உண்ணாதீர்கள், அது ஆரோக்கியம் இல்லை மேலும் அது நோன்பின் மகத்துவத்தை கெடுத்துவிடும். நோன்பு திறப்பது இப்தார் எனப்படும். வாழ்த்துக்கள், வெற்றிகரமாக உங்கள் நோன்பை முதல் முடித்துவிட்டீர்கள். எல்லா புகழும் இறைவனுக்கே. இதே போல் மற்ற நோன்பையும் முடித்துவிடுங்கள்

16. உணவு உண்ட பின் (விரும்பினால்) சாயங்கால தொழுகையை (மக்ரிப்) தொழுங்கள். பின்னர் இரவு தொழுகையை (இஷா) தொழுங்கள்.

17. இரவு மிகவும் சிறிதாக உண்டு விட்டு, மறுநாள் காலை இதே போலே நோன்பு நோற்கவும்.
30 நாட்களும் நோன்பை நிறைவு செய்து ரமலான் பெருநாளை கொண்டாடுங்கள்.

உங்கள் எல்லா முயற்சிகளிலும் அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டுவான். ஆமீன்.

இதில் எந்த சந்தேகம் இருந்தால், கேள்விகள் இருந்தால் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்
முகவரி info@tamilquran.org

அல்லது facebook ல் தொடர்பு கொள்ளவும்

நோன்பை முறிக்கும் செயல்கள்

  • நோன்பிற்கு இடையில் சாப்பிடுவது அல்லது தண்ணீர் அருந்துவது.
  • உடலுறவு கொள்வது.
  • நோன்பின் போது மது அருந்துவது அல்லது மது அருந்திவிட்டு நோன்பு வைப்பது.
  • சிகரெட் புகைத்தல் அல்லது போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல்.
  • வாந்தி எடுப்பது.

How to Fast in Ramadan

Simple Steps and Procedure for Non-Muslims

In Islam, fasting is observed during the month of Ramadan for almost 29-30 days. Fasting is observed for Allah, during this month. This year fasting starts on April 3, 2022 and ends on May 2, 2022 depending on the visibility of crescent.

Fasting is kept by eating and saying the Prayer (Niyah-Intention) in the morning before dawn. Fasting is completed by saying a Prayer (Dua-Small Prayer) at sunset and eating light food. Between the sunrise and sunset, you should not eat or drink. Non-Muslims, if they wish, can offer 5 times Salah (Islamic Prayer) on that whole day when they observe the fast. For Muslims, it is obligatory to pray 5 times a day, whether it is on Fasting or not. Fasting is obligatory on all the Muslims who has reached the age of puberty. Fasting commanded by Allah in the Quran from Chapter 2, Verse 185


“The month of Ramadhan [is that] in which was revealed the Qur'an, a guidance for the people and clear proofs of guidance and criterion. So whoever sights [the new moon of] the month, let him fast it; and whoever is ill or on a journey - then an equal number of other days. Allah intends for you ease and does not intend for you hardship and [wants] for you to complete the period and to glorify Allah for that [to] which He has guided you; and perhaps you will be grateful.”

  • Saheeh International Version

What is Niyah, Dua, Salah, Sahar, Iftar?

Niyah – Intention – A small prayer to Allah mentioning your intention and desire to Fast.

Dua – Supplication – A small prayer to Allah mentioning that you are going to complete the Fast.

Salah – Prayer – Islamic Prayers.

Sahar – The time you eat in the morning before sunrise to keep Fast.

Iftar – The time you eat in the evening to break your Fast.

Please, download the Fasting and Prayer Timetable, provided in this page.


Download Daily Prayer Timetable
Download Fasting Timetable


FASTING, STEP BY STEP PROCEDURE

1. Note the Fasting Start Time (Sahar End Time) on the Fasting Timetable. Prepare the food the night before. Fasting Start Time is usually 10 mins before the Morning Prayer Time (Fajr Prayer).

2. Wake up 1 hour before the Fasting Start Time, the day you are Fasting. Brush your teeth and finish any chores. Eat your meal, comfortably. Don’t overeat. Eat up to 80%-90% including water. Your meals menu should be your regular lunch menu that you eat in your home (Veg or Non-Veg). If non-veg, eat only Halal Meat, which you get from meat shop run by Muslims. Eat more Dates that will give energy throughout the day.

3. Don't be nervous, Fasting is easy. Allah will make it so easy for you.

4. 10 mins before the start time of the Fasting, finish all your food and complete by drinking enough water.

5. Now, you can say your Niyah (Intention – Small Prayer) as mentioned below. to start your Fasting.  You can say the Transliteration or in English or Tamil Version, all are accepted.

(Arabic) 
وَبِصَوْمِ غَدٍ نَّوَيْتُ مِنْ شَهْرِ رَمَضَانَ

(Transliteration)
Wa bisawmi ghadinn nawwaiytu min shahri ramadan

(English)
I intend to keep fast for the month of Ramadan for Allah.

6. Once you have completed your Niyah Prayer, your Fasting starts. You should not eat or drink anything thereafter. You can swallow the saliva, that is ok.

7. (Optional) Do Fajr-Prayer at the Morning time, if you have a muslim friend ask him/her to help with prayer.

8. (Optional) Do Dhuhr-Prayer at the Afternoon time (see the Daily Prayer Timetable).

9. (Optional) Do the Asr-Prayer at the early evening time (see the Daily Prayer Timetable).

10. For breaking the Fast prepare the meals with Dates, Light Snacks, Fruit Juice, Idli, Dosai, Vadai, Chutney, Sambar, Halal Chicken or Halal Mutton specialities.

11. Now, you are going to break the Fast. Note the Fast-breaking time (Iftar Time) from the Fasting Timetable. It will be usually on the evening prayer time (Maghrib Prayer Time). Make sure you wait till the breaking time. You can even delay 2 or 5 mins after the breaking time to break the Fast.

12. Get ready 5 or 10 mins before the Fast-Breaking Time with your food and stay calm.

13. Before breaking the Fast you can Dua to Allah for yourself (Pray to Allah for you in your language). It can be about you, your parents, your friends Health, Education, Money, Better Life anything you want. Allah will bless you with the prosperity you desire. Inshallah. Ameen.

14. When the Fast-Breaking Time comes. Say the Dua (Fast Breaking Prayer) mentioned below to complete the your Fast.   You can say the Transliteration or in English or Tamil Version, all are accepted.

(Arabic)
اللَّهُمَّ اِنِّى لَكَ صُمْتُ وَبِكَ امنْتُ وَعَليْكَ تَوَكّلتُ وَ عَلى رِزْقِكَ اَفْطَرْتُ

(Transliteration)
Allahumma inni laka sumtu wa bika aamantu wa alayka tawakkaltu wa ala rizq-ika-aftartu.


(English)

O Allah! I fasted for You and I believe in You and I put my trust in You and I break my fast with Your sustenance

15. Now you can eat by starting with Dates and Juice and finish your meal. Don’t eat too much that is not good for health and it defeats the purpose of Fasting. Breaking Fast is called IFTAR. Congratulations, you have successfully completed your First Fasting (Alhamdulillah – All praise is due to Allah). Similarly, complete other days Fasting.

16. After, finishing your meal. (optional) do evening prayer (Maghrib Prayer) And also do the Night Prayer (Isha Prayer).

17. Have a light Dinner and do the same for the next day Fasting


Complete all the 30 days Fasting and Celebrate Ramadan. May Allah give you Guidance in all your Endeavors. Ameen.

If you have any questions, please contact us at info@tamilquran.org

Or contact us in facebook

Actions that Invalidates Fasting

  • Eating or Drinking water in between Fasting.
  • Intercourse.
  • Drinking Alcohol or Alcohol in blood at the time of Fasting.
  • Smoking Cigarette or using Intoxicants.
  • Vomiting.